திமுகவில் இணைந்தார் செந்தில் பாலாஜி..!

முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போது அமமுக உறுப்பினருமாக இருந்த செந்தில் பாலாஜி, இன்று திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார்.

தி.மு.கதலைமை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன்திமுகவில் இணைவதாக முன்னதாக தகவல்கள் வெளியானது. இந்தசெய்தி தமிழகஅரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் தினகரன் ஆதரவாளர் தங்கத் தமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி தி.மு.கவில் சேர மாட்டார் என்று மறுப்பு தெரிவித்தார்.ஆனால் தங்கத்தமிழ் செல்வன் பேட்டியளித்து சில மணி நேரங்களிலேயே திமுகமுன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுடன் செந்தில் பாலாஜி விமான நிலையத்தில் நடந்துசெல்வது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர், செந்தில் பாலாஜி திமுகவில் இணைவது உறுதியானது. அதன்படி, திமுகவில் இன்று பிற்பகல் 12 மணிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அவர் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்துள்ளார்.

இவர் முன்னதாக திமுகவில் மாவட்ட செயலாளராக இருந்துள்ளார். மேலும் அதிமுகவில் இருந்த போது போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்துள்ளார். முதலில் திமுக, பின்னர் அதிமுக, அதைத்தொடர்ந்து டிடிவி தினகரனின் அமமுகவில் இருந்த இவர் தற்போது மீண்டும் திமுகவில் இணைந்துள்ளார்.

Leave a Response