மேகதாது அணை திட்டம் கர்நாடகத்தை விட தமிழகத்திற்குத்தான் நல்லது: அமைச்சர் சிவகுமார்

மேகதாது திட்டம் நிறைவேற்றப்பட்டால் கர்நாடக மாநிலத்தைவிட தமிழ்நாடு மாநிலத்திற்குத்தான் நல்லது என்று கர்நாடக ந்ரீவளத்துறை அமைச்சர் சிவகுமார் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிப்பது மட்டுமே மேகதாது அருகே அணை கட்டுவதற்கு நோக்கம் என்றும், இந்த அணையில் தேக்கப்படும் நீரை கர்நாடகாவிற்கு பயன்படுத்த திட்டமிடப்படவில்லை என்றும், தமிழகத்திற்கும் இந்த அணையில் தேக்கி வைக்கப்பட்ட நீர் கிடைக்கும் என்றும் அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்

மேலும் இந்த அணை வரைவு அறிக்கை மட்டுமே தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது எனவும், இந்த விவகாரத்தில் ஒத்துழைப்பு தர வேண்டும் என தமிழக மக்களையும், முதலமைச்சரையும் கைக்கூப்பி வணங்குவதாகவும் அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.
மேகதாது அணை விவகாரம் குறித்து தாங்கள் எழுதிய கடிதத்துக்கு தமிழக முதலமைச்சர் இதுவரை பதிலளிக்கவில்லை என குறிப்பிட்ட அவர், மாநிலங்களுக்கு இடையே சண்டையிடுவது தங்கள் நோக்கம் அல்ல எனவும் தெரிவித்தார்.

Leave a Response