சூப்பர் ஸ்டாருக்கு நான் மட்டும் தான் சரியான ஜோடி – சிம்ரன்..!

சூப்பர் ஸ்டாருக்கு எப்படியும் நான் தான் கரெக்டான ஜோடி என சிம்ரன் என கூறியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி,பாபி சிம்ஹா, சசிகுமார், நவாஸுதீன் சித்திக், சிம்ரன், த்ரிஷா என பலர் இணைந்து நடித்துள்ள படம் பேட்ட.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் படு பிரம்மாண்டமாக நடந்து வருகிறது.
இந்த இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் உட்பட ரசிகர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
சிம்ரன் இந்த நிகழ்ச்சியில் பேசிய போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பற்றி புகழ்ந்து பேசினார்.

அதன் பின்னர் சந்திரமுகியாக சிறிது நேரம் நடிக்குமாறு தொகுப்பாளர்கள் கூற உடனே சிம்ரன் சந்திரமுகி போல நடித்திருந்தார்.

அதன் பின்னர் இதுவரை நடித்தவர்கள் மற்றும் இப்போது ரஜினியுடன் சேர்ந்து நடித்த நீங்கள் இவர்களில் யார் சரியான ஜோடி என கேள்வி எழுப்பி எழுப்பினர்.
அதற்கு சிம்ரன் நான் தான் என கூறியுள்ளார். நடந்த விசயங்களை எல்லாம் மாற்ற முடியும் என்றால் இதுவரை வெளியான ரஜினி படங்களின் ஹீரோயின்களை தான் மாற்றுவேன், ரஜினியுடன் இணைந்து நடிக்க ஆவலுவு ஆசை என கூறியுள்ளார்.

Leave a Response