மோடியை இன்று சந்திக்கிறார் ஆளுநர் புரோஹித் : மேகதாது பற்றி ஆலோசனை?

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிரதமர் மோடியை சந்திப்பதற்காக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.

தமிழகத்தில் தற்போது மேகதாது அணை பிரச்சனையும், கஜா புயல் பிரச்சனையும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கஜா புயலுக்கு இன்னும் முழுமையாக நிவாரணம் வழங்கப்படவில்லை.

மத்திய அரசு இன்னும் தமிழக அரசு கேட்ட நிவாரண தொகையை கொடுக்கவில்லை. அதேபோல் மேகதாது அணை விவகாரத்திலும் மத்திய அரசு கர்நாடகாவிற்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு ஆதரவாக இதில் எந்த முடிவும் எடுக்கவில்லை.

இதனால் மத்திய அரசு மீது தமிழக மக்களும் தமிழக அரசியல் கட்சிகளும் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இதற்கு மத்தியில் தற்போது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.

டெல்லியில் அவர் பிரதமர் மோடியை இன்று மாலை சந்திக்க உள்ளார். பிரதமர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடக்க உள்ளது.

இந்த சந்திப்பில் ஆளுநர் புரோஹித், கஜா புயல் குறித்தும், மேகதாது அணை விவகாரம் குறித்து பேச வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Response