விஸ்வாசம் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய சன் டிவி..!

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. படத்தின் டீஸரை வெளியிடுமாறு தல ரசிகர்கள் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் விஸ்வாசம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது விஸ்வாசம் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு விஸ்வாசத்துடன் வெளியாகும் ரஜினியின் பேட்ட படத்தை சன் பிக்சர்ஸ் தான் தயாரித்துள்ளது.

அப்படி இருக்கும்போது சன் டிவி விஸ்வாசம் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விஸ்வாசம் படத்தை அடுத்து அஜித், ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்கிறார்.

பிங்க் இந்தி படத்தின் ரீமேக்கில் தான் அஜித் நடிக்கிறார். சிவாவை போன்று இல்லாமல் வினோத் அடிக்கடி அப்பேட் கொடுப்பார் என்று எதிர்பார்க்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.

Leave a Response