சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ரியோ நடிக்கும் புதிய படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

தொலைக்காட்சியிலிருந்து திரைத்துறைக்கு வந்து முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். அதற்காக சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியிருக்கும் அவர்,

தனது நண்பர் அருண்ராஜா இயக்கும் முதல் படமான ‘கனா’ படத்தை தயாரித்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படம் டிசம்பர் மாதத்தில் திரைக்கு வர உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை யூடியூபில் பிரபலமான ஸ்மைல் சேட்டை புகழ் கார்த்திக் இயக்கவுள்ளார். இவரது இயக்கத்தில் உருவாகும் முதல் திரைப்படம் இது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.
இந்தப் படத்தில் நடிகர் ரியோவுக்கு ஜோடியாக ஷெரின் நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் ராதாரவி, ஆர்.ஜே.விக்னேஷ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

Leave a Response