அருண் விஜய் நடிக்கும் ‘பாக்ஸர்’..!

நடிகர் அருண் விஜய்யின் புதிய படத்திற்கு பாக்ஸர் என பெயரிடப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக வெற்றிக்காக போராடி வந்த அருண் விஜய்க்கு ‘தடையற தாக்க’ படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இதையடுத்து அஜித்துக்கு வில்லனாக என்னை அறிந்தால் படத்தில் செய்த கதாபாத்திரம் நல்ல பெயரை பெற்று தந்தது.

இந்த படங்களை தொடர்ந்து, தனது அடுத்தடுத்த படங்களை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார். மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படமும் அருண் விஜய்யின் மார்கெட்டை உயர்த்தி இருக்கிறது.

அருண் விஜய் நடிப்பில் அடுத்ததாக தடம் திரைப்படம் ரிலீசாக இருக்கிறது. மகிழ் திருமேனி இயக்கியிருக்கும் இந்த படம் ஆகபஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது.

இது தவிர அருண் விஜய் வா டீல்’, சாஹோ’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் அக்னிச் சிறகுகள்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இந்த நிலையில், அருண் விஜய்யின் பிறந்தநாளான நேற்று அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. ‘பாக்ஸர்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை விவேக் இயக்குகிறார். எலெக்ட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.

 

Leave a Response