சபரிமலை விவகாரம்: கேரளாவில் இன்று முழு அடைப்பு..!

சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜைக்காக நேற்று மாலை நடை திறந்துள்ள நிலையில், பெண்களுக்கு எதிரான போராட்டமும் தீவிரமடைந்து உள்ளது. இதையடுத்து இன்று மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இருந்து செல்லும் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டு உள்ளன.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு கூறியதற்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, அம்மாவட்டத்தில்144 தடை உத்தரவு விதிக்கப்பட் டிருந்தது. காவல் துறையினர் பலத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் நேற்று சமூக ஆர்வலர் திருப்தி தேசாய், சபரிமலைக்கு செல்வேன். முடிந்தால் தடுத்து பாருங்கள் என்று சவால் விட்டு நேற்று அதிகாலை கொச்சி விமான நிலையம் வந்தடைந் தார். ஆனால், விமான நிலையத்தில் இருந்து வெளிவர முடியாத படி பொதுமக்கள் விமான நிலையத்தை சுற்றி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அவர் திரும்பி சென்றுள்ளார்.

இந்த நிலையில், அய்யப்பன் கோவிலுக்கு செல்ல முன்பதிவு செய்துள்ள இளம்பெண்களை அழைத்துச் செல்ல கேரள மாநில அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ‘இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கரும சமிதி இயக்கம் என்ற அமைப்பு முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இதற்கு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்புகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

இதைத்தொடர்ந்து, கேரள மாநிலம் தழுவிய அளவில் இன்று முழு அடைப்பு நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக கோவையில் இருந்து கேரளாவுக்கு பேருந்துகள் இயக்குவது நிறுத்தப்பட்டு உள்ளது. கோவை உக்கடம், காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் இன்று இயக்கப்படவில்லை. அதுபோல நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டு உள்ளன.

Leave a Response