மிரளவைக்கும் அமைச்சர் வேடத்தில் நடிகை மதுபாலா..!

பாபி சிம்ஹா ,நடிகை மதுபாலா ,நடிகை ரம்யா நம்பீசன் மற்றும் சதிஷ் ஆகியோர் கூட்டணியில்  உருவாகிவரும்  புதிய படம் ” அக்னி தேவ் “. இப்படத்தை சென்னையில் ஒரு நாள் 2 பட இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் அறிமுக இயக்குனர் சாம் சூர்யா ஆகிய இருவரும் இயக்குகின்றனர்.இந்த படத்திற்கு ஜேக்ஸ் பெஜாய் இசைஅமைத்துள்ளார்.

இப்படத்தில் நடிகை மதுபாலா ‘சகுந்தலா தேவி ” எனும் கதாபாத்திர பெயரில் மிரளவைக்கும் அமைச்சர் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தினை சியாண்டோ ஸ்டூடியோ மற்றும் ஜெய் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.
தற்போது இந்த படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது.

Leave a Response