“சர்கார்” படத்தின் கதை வருணுடையதுதான், ஒப்புக் கொண்ட முருகதாஸ்..!

சர்கார் படத்தின் கதை வருணுடையதுதான் என்று ஒரு வழியாக முருகதாஸ் ஒப்புக் கொண்டுள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் சர்கார் என்ற படம் தீபாவளிக்கு ரிலீஸாவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது விஜயின் அரசியல் பேச்சு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

மேலும் இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சினிமா ஆர்வலர்களும் எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தனது கதையை திருடி சர்கார் என பெயரிட்டுள்ளதாக வருண் ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனால் அப்படத்துக்கு சிக்கல் ஏற்பட்டது. தீபாவளிக்கு படம் வெளிவருமோ வராதோ என ரசிகர்களும் படக்குழுவினரும் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை நீதிபதி சுந்தர் முன்பு இன்று வந்தது.

அப்போது கதாசிரியர் வருணுடன் சமரசம் ஏற்பட்டுவிட்டதாக ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்தார். இதையடுத்து படம் திரையிடும் போது வருண் ராஜேந்திரனின் பெயர் போட்டு நன்றி தெரிவிக்கப்படும் என்று முருகதாஸ் கூறினார். இதையடுத்து இப்பிரச்சினை முடிவுக்கு வந்தது.

இதனிடையே சர்கார் படம் வருண் ராஜேந்திரனின் செங்கோல் கதையை மூலமாக கொண்டது தான் என முருகதாஸ் ஒப்புக் கொண்டுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Leave a Response