அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது இவர்தான்..!

அஜித்தின் அடுத்தப்படம் இதுதான் என்று வெளியான தகவலால் ரசிகர்கள் வெகு உற்சாகம் அடைந்துள்ளனர்.

அஜித் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பில் படு பிஸியாக இருக்கிறார். படப்பிடிப்பில் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிற நேரத்தில் படத்திற்காக போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் வேகமாக நடக்கிறது.

இதற்கிடையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. சிவாவுடனேயே தொடர்ந்து கூட்டணி அமைத்து வந்த அஜித் இப்போது 59வது படத்தின் மூலம் தீரன் பட புகழ் வினோத்துடன் இணைய இருக்கிறார்.

போனி கபூர் இப்படத்தை தயாரிக்க படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் பிப்ரவரியில் தொடங்குகிறது. படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் அல்லது யுவன் தான் இசை என கிசுகிசுக்கப்படுகிறது. இப்படி ஒரு தகவல் வர ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள், இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Leave a Response