‘காற்றின் மொழி’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் யோகிபாபு..!

நாளுக்கு நாள் ‘காற்றின் மொழி’ படம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஈர்த்து வருகிறது. அப்படத்தின் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பெரிய நடிகர்களின் பெயர்கள் உதாரணத்திற்கு சிம்பு அப்படத்தில் நடித்திருப்பதாக வந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது, அண்மைக் காலங்களில் நகைச்சுவையில் எல்லோரையும் கவர்ந்து வருகிறார் யோகிபாபு. அவர் ‘காற்றின் மொழி’ படத்திற்காக சில காட்சிகளில் நடித்திருக்கிறார்.
ஜோதிகாவுடன் நடித்த இரண்டு காட்சிகளுமே நகைச்சவை மிகுந்து இருக்கும். அரங்கத்தில் மிகப்பெரிய சிரிப்பலைகளை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது என்று படக்குழு தெரிவிக்கிறது. RJ வாக நடிக்கும் ஜோதிகாவிற்கு நிறைய பேர் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரவர்களின் காதலைப் பற்றி பேசுகின்றனர். அதில் ஒரு அழைப்பாளராக யோகிபாபுவும் பேச, ஜோதிகா அவருக்கு காதலில் ஏற்படும் பிரச்சனையை எப்படி சரிசெய்வது என்று தீர்வு சொல்லும் விதமாக அந்த காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.
 
BOFTA-வின் G.தனஞ்செயன், S.விக்ரம் குமார் மற்றும் லலிதா தனஞ்செயன் ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தில் விதார்த், லக்ஷ்மி மஞ்சு, M.S.பாஸ்கர், மனோபாலா, குமரவேல், மோகன்ராமன், உமா, பத்மநாபன், சீமா தனேஜா மற்றும் சிந்து ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
 
A.R.ரகுமானின் உறவினரான A.H.காஷிப் இசையமைத்திருக்கிறார். இவர் ஏற்கனவே இசையமைத்தப் பாடல் அனைவரையும் மயக்கத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது. மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, கலையை கதிர் கவனிக்கிறார். உடைகளை பூர்ணிமாவும், பிரவின் KL எடிட்டிங் செய்கிறார். ராதா மோகன் இயக்கிய இப்படத்திற்கு பொன் பார்த்திபன் வசனங்களை எழுதியிருக்கிறார்.

Leave a Response