நல்ல கதையம்சம் கொண்ட படங்களை இயக்குவதில் வல்லவர் இயக்குனர் சுசீந்திரன். தற்போது இவர் ஜீனியஸ் , ஏஞ்சலினா , சாம்பியன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். ஜீனியஸ் வருகிற அக்டோபர் 26 ஆம் தேதி வெளியாகிறது. இதைத்தொடர்ந்து இயக்குனர் சுசீந்திரன், சசிகுமார் மற்றும் இயக்குனர் பாரதிராஜா நடிப்பில் “ கென்னடி கிளப் “ என்ற படத்தை இயக்குகிறார். சூரி , முனீஸ்காந்த் , மீனாட்சி , காயத்ரி , நீது , சௌமியா , ஸிம்ரிதி , சௌந்தர்யா உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்துக்காக பாலிவுட் வில்லனை தேடிவருகிறார் சுசீந்திரன்.
பாண்டியநாடு , பாயும் புலி மற்றும் மாவீரன் கிட்டு படத்துக்கு பின் D. இமான் , இயக்குனர் சுசீந்திரன் கூட்டணி இப்படத்தில் இணைகிறது. ஒளிப்பதிவு குருதேவ். கலை சேகர்.B. நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தாய் சரவணன் இப்படத்தை தயாரிக்கிறார். பழனியை கதைக்களமாக வைத்து உருவாகவுள்ள இப்படம். வருகிற தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகவுள்ளது.
இயக்குனர் சுசீந்திரனின் தந்தை புகழ்பெற்ற கபடிக்குழுவின் நிறுவனர். அவர் 40 வருடமாக அந்த கபடி குழுவை நடத்தி பயிற்சியளித்து வருகிறார். அவரிடம் பயிற்சி பெற்ற பலர் தேசிய மற்றும் உலகளாவிய போட்டிகளில் பங்குபெற்று பதக்கங்கள் வென்றுள்ளனர். படத்தில் நிஜ பெண் கபடி வீராங்கனைகள் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. இதில் படத்தில் நடிக்கும் நடிகர் அனைவரும் கலந்துக்கொண்டார்கள்.