“ராஜா ராணி” படத்தில் அரக்க பறக்க ஒரு பாடல்!

Nayanthara, Arya in Raja Rani Movie First Look Posters

Fox Star Studios நிறுவனமும், இயக்குனர் முருகதாசின் ARM Productions நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் ‘ராஜாராணி’. ஷங்கரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய அட்லீ இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நசீம் மற்றும் சந்தானம் ஆகியோர் நடிக்கிறார்கள்.

படத்தில் பரப்பரப்பும் அதிகம். எதிர்பார்ப்பும் அதிகம். தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் கதை என பரபரப்பாக கிசுகிசுக்கப்பட்டது. பின்னர் ஆர்யா, நயன்தார திருமணம் என புரட்டிப் போட்ட விளம்பர யுத்தியால் பரபரப்பாக்கி விட்டனர்.

இப்போது இந்த பரபரப்பு இசை அமைப்பாளர் G.V.பிரகாஷ் இசையில், பா.விஜய் பாடல் வரிகளில் விஜய்பிரகாஷ் – சாஷா பாடிய ஒரு வேகமான பாடல்மேல் இருக்கிறது. கேட்டவர்கள் காலில் தாளம் போட, உதடுகள் இடைவிடாமல்  முணுமுணுக்க இப்போதே இந்த பாடல் இந்த வருடத்தின் Super Hit என  கணிக்கின்றனர் படப்பிடிப்பு குழுவினர்.