கண்ணா ரெண்டாவது லட்டு தின்ன ஆசையா – மீண்டும் வரும் அதே டீம்!

KLTA

சந்தானத்தின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான ஒரு மைல்கல் படம் “கண்ணா லட்டு தின்ன ஆசையா”. அவரை ஒரு தயாரிப்பாளராகவும் மாற்றிய படம்,  நாயகன் போல சந்தானமும், அவரின் நண்பர்கள் போல சேதுவும், பவர் ஸ்டார் சீனிவாசனும் நடித்திருந்தனர். படமும் பெரிய வெற்றி. இப்போது அதே கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைகிறது சிறை நாயகன் பவர் ஸ்டாரை தவிர்த்து. படத்திற்கு வாலிப ராஜா என்று பெயரிட்டுள்ளனர்.

“வாலிப ராஜாவான” சந்தானம் மனோதத்துவ நிபுணராக நடிக்கிறார். சேதுவுடன் கண்ணா லட்டு தின்ன ஆசையா விசாகா சிங் நாயகியாக நடிக்க இன்னொரு நாயகியாக நடிக்க வைக்க நாயகி தேடி வருகிறார்கள். இவர்களுடன் சித்ரா லக்ஷ்மணன், தேவதர்ஷினி, ஜே.பி. மற்றும் பலர் நடிக்கின்றனர்.

கோ, மாற்றான் படங்களில் கே.வி.ஆனந்திடம் இணை இயக்குனராக பணியாற்றிய சாய் கோகுல் ராம்நாத் இயக்குகிறார். லோக்நாத் ஒளிப்பதிவு செய்ய, ரதன் இசையமைக்கிறார். வான்க்ஸ் விஷன் 1 சார்பில் H.முரளி தயாரிக்கிறார். காதல், காமெடி, குடும்பம் என அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் அமையவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் 19-ல் சென்னையில் தொடங்குகிறது.