நட்புக்காக எழுதி, பாடும் சிம்பு!

inga enna solluthu

சிம்பு  செய்தியில்  இல்லாத நாளே இல்லை!  தனது ஆன்மீக பயணம், அவர் படங்கள் குறித்த சர்ச்சை என்று  செய்தியில் நிறைந்த வண்ணம் இருந்தவர். இப்போது அவருக்கு பிடித்த களத்தில்  மீண்டும் இறங்குகிறார்.

தானே பாடல் எழுதி, தன்னுடைய குரலிலேயே பாடவும் செய்கிறார். தான் நடிக்கும் படங்களுக்கு மட்டுமே இவ்விரண்டையும் சிம்பு செய்வது  வாடிக்கை. தற்போது தன்னுடைய நண்பரும், தயாரிப்பாளரும், நடிகருமான  VTV.கணேஷ் தயாரித்து நடிக்கும் படத்தில் ஒரு முக்கியமான பிரதானமான  பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நடிப்பதோடு மட்டுமல்லாமல் கதை விவாதத்திலும் கலந்து கொண்டு, பெரும் ஈடுப்பாட்டுடன் இருந்து வரும் சிம்பு தொடர்ந்து தனது பங்களிப்பாக ஒரு பாடலை இயற்றி சொந்த குரலில் பாடவும் செய்து உள்ளார். அவர் இயற்றி பாடிய பாடல் வரிகள் இதுதான்.

“குட்டி பயலே குட்டி பயலே

எதை தேடி நீ ஓடுற.

சுட்டி பயலே சுட்டி பயலே

என்னத்தை நீ தேடுற’.

இந்தப் பாடல் நிச்சயம் இப்படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்கிறார் இயக்குனர் வின்சென்ட் செல்வா.