சசிகலா அதிமுகவில் உறுப்பினர் இல்லை – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்..!

சசிகலா அதிமுகவில் உறுப்பினர் இல்லை என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இணைந்த புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஒரு எஃகு கோட்டை என்றார். 1.5 கோடி உறுப்பினர்களை கொண்ட அதிமுக எஃகு கோட்டையை உருவாக்கியவர் ஜெயலலிதா.

நடப்பாண்டில் 60 லட்சம் பேர் கட்சியில் இணைந்துள்ளனர். அதிமுக-வில் புதிய உறுப்பினராக சசிகலா சேர்க்கப்படவில்லை. தினகரனுடன் சென்ற சொற்பமானவர்கள் மட்டுமே அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் ஆகியோரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவர்களின் விளக்கத்தை கேட்ட பின்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதிமுக வழிகாட்டுதல் குழு தேவைப்படும்போது அமைக்கப்படும். இவ்வாறு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Leave a Response