20 கோடி ரூபாய் செலவில் தயாராகும் ‘அர்ஜுனின் ஜெய்ஹிந்த் 2’!

IMG_0556

நடிகர் அர்ஜுன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் பட நிறுவனத்தின் சார்பாக இதுவரை 10 வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளார். அத்தனை படங்களுமே பேசப்பட்ட படங்களாகும். தற்போது இந்நிறுவனம் சார்பாக தயாரிக்கும் படத்திற்கு ‘அர்ஜுனின் ஜெய்ஹிந்த் 2’ என்று பெயரிட்டுள்ளனர்.

அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சுர்வின் சாவ்லா நடிக்கிறார். மற்றும் சிம்ரன் கபூர், மயில்சாமி, மனோபாலா, மும்பை வில்லன் ராகுல்தேவ், ரவி காளே, ஷஃபி, ராஜீவ் ரவீந்திரன் ஆகியோருடன் மூன்று புதுமுகங்கள் கல்லூரி மாணவர்களாகவும், 4 இளம் பெண்கள் மாணவிகளாகவும் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் இன்னும் ஏராளமான நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – வேணு. இசை – ஹரிகிருஷ்ணா. பாடல்கள் – வைரமுத்து. கதை, திரைக்கதை, தயாரிப்பு, இயக்கம் – அர்ஜுன்

அர்ஜுன் இயக்கத்தில் உருவாகும் பத்தாவது படம் ‘அர்ஜுனின் ஜெய்ஹிந்த் 2’. சுமார் 20 கோடி ரூபாய் செலவில் உருவாகும் படம் இது. தேசப்பற்று, சமுதாய அக்கறை கொண்ட கமர்ஷியல் படமாக உருவாகிறது இப்படம். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மும்பை, டெல்லி, ஹைதராபாத் மற்றும் லண்டனில் பெரும்பகுதி படப்பிடிப்பு நடைபெற உள்ளது.