நக்கீரன் கோபால் கைதுக்கு டிடிவி தினகரன் வரவேற்பு..!

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

நக்கீரன் ஆசிரியர் கோபால் இன்று காலை தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் திருச்சியில் பேட்டியளித்த அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்ததாவது:

எந்தவித ஆதாரமில்லாமல் தனிநபர்கள் மீது அவதூறாக செய்திகளை வெளியிடுவது தவறு. அந்த வகையில் நக்கீரன் கோபால் மீது வழக்கு தொடர்ந்து இருப்பதை நான் வரவேற்கிறேன். பத்திரிகையாளர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். கடந்த, 1996ம் ஆண்டு என் மீது அவதூறு செய்தி வெளியிட்ட நக்கீரன் கோபாலுக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை பெற்று கொடுத்தேன்.

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மட்டுமல்ல, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் நடை பயிற்சியின்போது என்னை சந்தித்தார் என்றார் தினகரன்.

Leave a Response