பழங்குடி மக்களின் தலைவனாக திகழ்ந்த பீர்ஸா முண்டா வாழ்க்கை படமாகிறது….

1875 முதல் 1900 வரை ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட காலத்தில் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் பகுதியில் பழங்குடி சமூகத்தில் வாழ்ந்தவர் பீர்ஸா முண்டா. இந்திய பழங்குடி மக்களின் சுதந்திரத்திற்கும், உரிமைக்கும் பாடுபட்டவர் இந்த பீர்ஸா முண்டா.

பீர்ஸா முண்டா வாழ்ந்த அந்த 24 ஆண்டு குறுகிய காலத்தில், அந்த பழங்குடி இனத்தினருக்காக அயராது உழைத்து பாடுபட்டவர். இன்றும் இந்திய பாராளுமன்ற மத்திய அரங்கில் அவருடைய உருவப்படம் மாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பழங்குடி இனத்தை சேர்ந்த இப்படிப்பட்ட ஒரு போராளியின் வாழ்க்கை வரலாறு தற்போது படமாக்கப்பட உள்ளது.

சமீபத்தில் நயன்தாரா நடித்து மாபெரும் வெற்றிபெற்ற ‘அறம்’ திரைப்படத்தினை இயக்கிய கோபி நயினார் தற்போது நடிகர் ஜெய்யை கதாநாயகனாக அமர்த்தி கால்பந்து விளையாட்டு சம்மந்தமான ஒரு புதிய திரைப்படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் முடிவடையும் தருணத்தில் உள்ளது.

ஒருபுறத்தில் ஜெய்யை இயக்கும் கோபி நயினார், மறுபுறத்தில் பீர்ஸா முண்டா அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய இந்த புது படத்தினை அடுத்து இயக்கும் ஆயத்தப்பணியில் ஈடுபட்டுள்ளார். பீர்ஸா முண்டா பற்றிய வரலாற்று கதையினை சேகரித்து வைத்துள்ள கோபி நயினார், ஜெய் படம் முடிந்தவுடன் உடனடியாக பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு செல்லவிற்கிறார். பீகார் மற்றும் ஜார்கண்ட் சென்று, அங்கு வாழும் பழங்குடி சமுதாயத்தினரை சந்திக்கவிற்கிறார். பழங்குடியினருடன் சந்திக்கவிற்கும் கோபி நயினார், அவர்கள் பண்டைக்காலத்து வாழ்வியல், பழக்க வழக்கங்கள், உடை, உணவு, உடற்பயிற்சி போன்றவற்றை பற்றி அறிந்துகொள்ள அங்கு சில வாரங்கள் முகாமிட திட்டமிட்டுள்ளார்.

கோபி நயினாரின் பீர்ஸா முண்டா பற்றிய படம் விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தினை தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கில் இயக்க கோபி நயினார் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Leave a Response