‘சண்டக்கோழி’ எனக்காக எழுதப்பட்ட கதையில்லை. விஜய் அல்லது சூர்யாவுக்காக எழுதப்பட்டது- விஷால் ஓப்பன் டாக்..!

‘சண்டக்கோழி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஷால் – டைரக்டர் லிங்குசாமி கூட்டணியில் தயாராகியுள்ள படம் ‘சண்டக்கோழி 2’.

கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படம் அக்டோபர் 18-ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் நம்மை சந்தித்தது படக்குழு.

சந்திப்பில் விஷால் பேசியதாவது, “25 படங்களில் என்னுடன் சேர்ந்து பயணம் செய்த அனைவருக்கும் நன்றி. ‘சண்டக்கோழி’ எனக்காக எழுதப்பட்ட கதையில்லை. விஜய் அல்லது சூர்யாவுக்காக எழுதப்பட்டது. இந்த மாதிரி ஒரு கதை இருப்பதாக எனக்கு தெரிய வந்து நான்தான் லிங்குசாமியிடம் சென்று கேட்டேன். அவர் என்னை ஒரு ஆகபஷன் ஹீரோவா கொண்ட வந்து நிறுத்தி விட்டார்.

இதுவரை நான் 24 படங்கள் நடித்து முடித்து விட்டேன். ‘சண்டகோழி 2’ படம் 25-வது படமாக அமைந்தது எனக்கு சாதனையாக தோன்றுகிறது. கீர்த்தி சுரேஷ் நடித்த மற்ற படங்களையும் பார்த்திருக்கிறேன். அவர்களுடைய ‘மகாநதி’ பார்த்தேன் அதை பார்த்து அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என கூறினேன். அவருடன் நடித்தது எனக்கு சந்தோசமாக உள்ளது. தயாரிப்பாளர் சங்கம் மூலமாக ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். தயவு செய்து படம் வெளிவந்து மூன்று நாள் கழித்து விமர்சனம் எழுதினால் சிறிய, பெரிய படத்திற்கு ஒரு நல்ல இடம் கிடைக்கும்.

நடிகர்கள் அரசியலில் வருவதற்கு காரணம் மாற்றம் தேவை என்பதற்காகத் தான். கருணாஸ் எல்லை மீறியதால் தான் கைது செய்யப்பட்டார். நான் நாளை வேலூர் சென்று கருணாஸை சந்தித்தாலும் சந்திப்பேன். அவருடைய கருத்து என்பது கட்சி ரீதியான கருத்து. நடிகை ஶ்ரீரெட்டி தமிழ் திரைப்படத்தில் நடிக்க நடிகர் சங்கம் எந்த தடையும் விதிக்காது. ஆனால் அவரோடு சேர்ந்து நடிக்கும் நடிகர்கள் கண்டிப்பாக ஜாக்கிரதையாக நடிக்க வேண்டும்” என்றார்.

Leave a Response