திமுகவினர் காந்திகளோ, உத்தம புருஷர்களோ இல்லை-அமைச்சர் செல்லூர் ராஜூ..!

திமுகவினர் காந்திகளோ, உத்தம புருஷர்களோ இல்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

அமைச்சர் செல்லூர் ராஜூ அவ்வப்போது சர்ச்சைக் கருத்துக்களை அதிரடியாக பேசி வருகிறார். அவரது பேச்சு பெரும்பாலும் சமூக வலைதளங்களில் காமெடியாக சித்தரிக்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று வேலூர் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர் திமுகவினரை கடுமையாக விமர்சித்து சீரியஸாக பேசியுள்ளார். வேலூர் மாவட்டம் வாணியம்பாடி ஆம்பூர் பகுதிகளில் கூட்டுறவு சங்கம் சார்பில் சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த கடைகளை அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, நிலோபர் கபில் ஆகியோர் திறந்து வைத்தனர். கடைகளை திறந்து வைத்து பின் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ திமுக போராட்டத்தை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது,

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு சாதனை மேல் சாதனை செய்து வருகிறது. அவரது புகழுக்கு இழுக்கு சேர்க்க வேண்டும் என்பதற்காக திமுக பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

திமுகவினர் நடத்தும் போராட்டங்களை பார்த்து மக்கள் சிரிக்கின்றனர். அவர்கள் நடத்தி வரும் போராட்டங்கள் அவர்களுக்கே ஆபத்தாக முடியும்.

திமுகவினர் ஒன்றும் காந்திகளோ, உத்தம புருஷர்களோ இல்லை என்பது நாட்டு மக்களுக்கு தெரியும் நாங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Leave a Response