அதிமுக ஆட்சியை அகற்றும் வரை தொடர்ந்து போராடுவோம்-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்..!

அதிமுக ஆட்சியை அகற்றும் வரை தொடர்ந்து போராடுவோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசை கண்டித்து, திமுக சார்பில் மாநிலம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றார். திமுக தலைவராக பொறுப்பேற்ற பிறகு ஸ்டாலின் பங்கேற்ற முதல் போராட்டம் இதுவாகும். போராட்டத்தின்போது பேசிய மு.க.ஸ்டாலின், தமிழகத்தை ஊழலில் இருந்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பு திமுகவுக்கு இருப்பதாகத் தெரிவித்தார்.

தமிழகத்தில் அனைத்து அமைச்சர்களும் ஊழலில் சிக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர், ஊழலுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மக்கள் பிரநிதிகள் மீதான ஊழல் வழக்கை விசாரிக்கும் லோக் ஆயுக்தா அமைப்பிற்கு, இதுவரை தலைவரை நியமிக்காதது ஏன்? என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

Leave a Response