போலியானவர்களின் முகத்திரையை கிழிக்க போகிறேன்- விஜயபாஸ்கர் ஆவேசம்..!

போலியானவர்களின் முகத்திரையை கிழிக்க போகிறேன் என்று விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்..

கடந்த ஒரு வடங்களாக அவ்வளவாக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல், பேட்டிகளை தராமல் தனியே ஒதுங்கி இருந்த விஜயபாஸ்கர் தற்போது வெளியே வந்துள்ளதார். குறிப்பாக அவரது வீட்டில் நடந்த ரெயிடு சம்பவத்துக்கு பின்னர் கட்சி கூட்டங்கள், பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். நிறைய விஷயங்களை துணிந்து பேசுகிறார்.

ரெயிடுக்கு பிறகு முதலமைச்சரை சந்தித்து விட்டு பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை, முதலமைச்சரிடம் என்ன பேசினாரோ தெரியவில்லை, விஜயபாஸ்கருக்கு கட்சியில் புதிய பொறுப்பும் கொடுத்துள்ளார்கள். இது கட்சிக்குள் பலருக்கு புகைச்சலை உண்டு பண்ணி வருகிறது. ஆனாலும் இதையெல்லாம் விஜயபாஸ்கர் கண்டுகொள்வதே கிடையாது. நேற்றுக்கூட அவரது சொந்த மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் பொதுமக்களிடையே பேசி கைத்தட்டலை அள்ளி இருக்கிறார்.

இந்த விழாவில்தான் பேசிய விஜயபாஸ்கர், “இங்கே கூறியிருக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். இந்த மேடையில் நான் அரசியல் பேசவில்லை. ஆனாலும், எவ்வளவோ பேர் என்னை வசை பாடி உள்ளார்கள். அவ்வளவு பேரின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்ற போகிறேன். இன்னும் ஒரே வாரத்தில் இதே புதுக்கோட்டையில் போட்டிக்கூட்டம் ஒன்றையும் நடத்த போகிறேன், அதுக்கு எப்படியும் 1 லட்சம் பேர் வருவார்கள், அப்போது என்னை மோசமாக கூறியவர்களின் போலி முகத்தை தோலுரிக்கிறேன், பாருங்கள்” என்றார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் இப்படி யாரை சொல்லி இருப்பார்? என்றுதான் மண்டை காய்கிறது. ஊழல் புகார் காரணமாக விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வேண்டும் பல்வேறு கட்சிகள் எதிர்ப்பை காட்டிய நிலையில், அதிமுகவிற்குள்ளேயே சில அமைச்சர்களும் இதைத்தான் முதலமைச்சரிடம் சொன்னார்களாம். விஜயபாஸ்கர் ராஜினாமா செய்யாவிட்டால் இன்னும் 3 வருஷத்துக்கு ஆட்சி கஷ்டம், அதனால் அவரை ராஜினினாமா செய்ய சொல்லுங்கள் என்று முதல்வரிடம் சொன்னார்களாம். ஆனால் விஜயபாஸ்கரோ, 30 எம்எல்ஏக்களை கூட்டிக் கொண்டு போய் தினகரனிடம் சேர்ந்து ஆட்சியை கவிழ்ப்பேன் என்று முதல்வரிடம் நேரிடையாக கூறியதாக தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில் விஜயபாஸ்கர் முகத்திரையை கிழிப்பேன் என்று சொன்னது ஒருவேளை முதல்வராக இருக்குமோ என்றும் அதிமுக தரப்பு அதிர்ந்து உள்ளது. இல்லையென்றால் விஜயபாஸ்கர் பேசினது தினகரனை கூட இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. காரணம், கடந்த 15-ம் தேதி புதுக்கோட்டை பொதுக்கூட்டத்துக்கு வந்திருந்த தினகரன் விஜயபாஸ்கரை கண்டமேனிக்கு விமர்சித்து பேசியிருந்தார். “இந்த ஊர் அமைச்சர் குட் டாக்டர் இல்லை, குட்கா டாக்டர் என்றும், முதலமைச்சர் என்னை கைவிட்டு விட்டார்” என்று தன்னிடம் சொன்னதாகவும் பேசினார். இதற்கு இதுவரை அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் ஏதும் சொல்லவில்லை.

 

Leave a Response