சினிமா போஸ்டரை கிழிக்கும் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஆனந்த்ராஜ் ஆதங்கம்..!

திரைப்பட போஸ்டர்களை கிழிக்கும் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆனந்த்ராஜ் கூறினார்.

அறிமுக இயக்குனர் வெற்றிச் செல்வன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்துள்ள ஜானி திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் ஆனந்தராஜ், சினிமா போஸ்டர்களை கிழித்துவிட்டு அரசியல்வாதிகள் கட்சி போஸ்டர்களை ஒட்டுவதாக புகார் கூறினார்.

இன்று அரசியல்வாதிகள் சினிமா போஸ்டர்களை கிழித்துவிட்டு விளம்பரம் செய்கின்றனர். எங்களுடைய சினிமா போஸ்டர்கள் சிறியது. பத்து சினிமா போஸ்டரை கிழித்தால்தான் ஒரு அரசியல் விளம்பரம் செய்ய முடியும்.

சினிமா போஸ்டரைப் பார்த்து மக்கள் திரையரங்கிற்கு வருகின்றனர். சினிமா டிக்கெட் மூலமாக பொதுமக்கள் செலுத்தும் ஜிஎஸ்டி மத்திய மாநில அரசுக்கு செல்கிறது. ஆனால் சுவற்றில் செய்யப்படும் அரசியல்வாதிகளின் விளம்பரங்களினால் அரசுக்கு என்ன லாபம்? அதனால் போஸ்டரைக் கிழிக்கும் அரசியல்வாதிகள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.

படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் தியாகராஜன், ஜானி திரைப்படத்திற்காக சென்சாரில் ஏற்பட்ட குழப்பங்களைப் பற்றி சொன்னார். பத்திரிகையாளர்களுடன் பல வருடங்களாக பயணிப்பதால் நல்ல கதையுடன் வரும் இயக்குனர்களுக்கு வாய்ப்பளிப்பதாக கூறினார். டீசரைப் பார்த்த மணிரத்னம், சிறப்பாக இருப்பதாக பாராட்டியதாகக் கூறினார். மேலும், நடிகர் ஆனந்தராஜ் ஒவ்வொரு காட்சியும் ரசித்து நடித்துள்ளதாகவும், அது படத்திற்கு மிக பிளஸ் என தெரிவித்தார்.

Leave a Response