டிடிவி.தினகரனுடன் திடீரென கை கோர்த்த இசையமைப்பாளர் தினா..!

பிரபல இசையமைப்பாளர் தினா டிடிவி தினகரனின் அமமுகவில் இணைந்துள்ளார்.

இசைஞானி இளையராஜாவிடம் உதவியாளராக பணியாற்றி அன்னை என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளாராக அறிமுகமானவர் தினா. ஆரம்ப காலத்தில் டிவி சீரியல்களுக்கு இசையமைத்து வந்தார். சித்தி உள்ளிட்ட பல்வேறு பிரபல தொடர்களின் பாடல்கள் தினா இசையமைப்பில் வந்ததுதான்.

மிடில்கிளாஸ் மாதவன், திருடா திருடி, கருப்பசாமி குத்தகைதாரர், பொறி, திண்டுக்கல் சாரதி, சீடன், விஜய்யின் திருப்பாச்சி மற்றும் அஜித்தின் ஜனா என ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல், சின்ன பாப்பா பெரிய பாப்பா, மெட்டி ஒலி போன்ற பல தொலைக்காட்சி தொடர்களுக்கும் இசையமைத்துள்ளார். இவர் கடைசியாக கில்லி பம்பரம் கோலி என்ற படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்போது டிடிவி. தினகரனின் கட்சியில் இணைந்துள்ளார்.

இன்று சென்னையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனை சந்தித்து கழகத்தின் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் ம.கரிகாலன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தார்.

Leave a Response