பிரமாண்டமாக நடைபெற்ற YMCA மெட்ராஸ் கலை மற்றும் பண்பாட்டு துறை நிகழ்ச்சி..!

YMCA மெட்ராஸ் கலை மற்றும் பண்பாட்டு துறை நிகழ்ச்சி வேப்பேரியில் திரு. ஆசிர் பாண்டியன் அவர்களின்  தலைமையில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து, பல்வேறு பள்ளிகள் இந்த விழாவில் கலந்து கொண்டன. இந்திய கலாச்சார திருவிழா என்கிற தலைப்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. YMCAவின் கூடுதல் செயலாளர் எட்வின் ஆப்ரஹாம், இவான் சுனில் டேனியல் மற்றும் YMCAவின் முக்கிய பொறுப்பாளர்கள் இந்த விழாவில் முன்னைலை வகித்தனர்.
இந்த விழாவை, காலையில் ரமேஷ் பிரபா அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். அதைத்  தொடர்ந்து திரு.T.N.சந்தோஷ் குமார் (YMCA கல்சுரல் கமிட்டி துணை சேர்மன்) வரவேற்பு உரையாற்றினார். அன்னை வேளாங்கன்னி குரூப் ஆப் எஜுகேஷன் டைரக்டர் திரு. தேவா ஆனந்த் கலந்து கொண்டார்.
பல்வேறு பள்ளிகளும் இந்திய கலாச்சார நடனத்தை மிக அற்புதமாக மேடையில் அரங்கேற்றினார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். டி.ஐ.ஜி. எ.முருகேசன் (சிறைத்துறை) மற்றும் YMCA  நிறுவனத்தின் தலைவர் டாக்டர் வின்சென்ட் ஜார்ஜ் இருவரும் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
இந்த போட்டியில் இதில் நெல்லை நாடார் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, முதல் இடத்தை பெற்று TN  சந்தோஷ் ரோலிங் டிராபியை தட்டிச்சென்றனர். இரண்டாவது இடத்தை MKB நகர் டான்பாஸ்கோ பள்ளியும், மூன்றாவது இடத்தை ஸ்ரீ சனாதன தர்மா மேல்நிலை பள்ளியும் வென்றனர்.
இந்த விழாவில்  YMCAவின் கூடுதல் செயலாளர் எட்வின் ஆப்ரஹாம் மற்றும் YMCAவின் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டார்கள். இறுதியாக இவான் சுனில் டேனியல்  அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள்.

Leave a Response