திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மறைவையொட்டி வேலூரில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியின்போதும் செய்தியாளர்கள் சந்திப்பின்போதும் அக்கட்சியின் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
வேலூர் மாவட்ட திமுக சார்பில் திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமைதி ஊர்வலம் நடைபெற்றது. அதனை அஞ்சலி செலுத்தும் நிகழச்சி நடைபெற்றது. அஞ்சலி நிகழ்ச்சியின்போதும் சரி, செய்தியாளர் சந்திப்பின்போதும் சரி, துரைமுருகன் கதறல்தான் அங்கு கேட்டது.
“திமுக தலைவர் இல்லாத என் நாட்கள் வாழ்க்கையில் இருண்டுபோன நாட்களாக நினைக்கிறேன். எத்தனையோ பேருக்கு பாரத ரத்னா விருதை வாங்கி கொடுத்தவர் அவர். அவருக்கு நாங்கள் பாரத ரத்னா கேட்பதைவிட தோழமை கட்சிகளே கேட்க துவங்கிவிட்டன.
மத்திய அரசும் அதற்கு மனது வைக்க வேண்டும்” என்று துக்கம் தாங்காமலே அந்த செய்தியாளர் கூட்டத்தையும் கண்ணீர்விட்டபடியே பேசி முடித்தார்.