கஜினிகாந்த் திரைவிமர்சனம்..!

ஆர்யா தனக்கு இருக்கும் மறதியால் என்ன என்ன பிரச்சனைகளை எல்லாம் சந்திக்கிறார் அதனால் அவரது திருமணம் எப்படி கைகூடுகிறது என்பது கதை. இந்த படத்தை சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கியிருக்கிறார். அடல்ட் படமாக எடுத்து வந்த ஜெயக்குமாருக்கு பேமிலி படமும் எடுக்க தெரியும் என்பதை நிரூபிக்க தெலுங்கு படமான பலே பலே மகாதிவோய் படத்தை ரீமேக் செய்து கஜினிகாந்த் படமாக எடுத்துள்ளார்.

ரீமேக் செய்யும் போது ஒரிரு காட்சிகளை மாற்றி தமிழுக்கு ஏற்றாற்போல காமெடி சீன்களை அமைப்பது தான் எப்போதும் நடைபெறும் நிகழ்ச்சி. படக்குழு அப்படி செய்யாமல் தெலுங்கில் இருப்பதை அப்படியே மாற்றி தமிழில் படைத்திருக்கிறார்கள்.

ஆர்யா எல்லா படத்திலும் வருவது போல இந்த படத்திலும் ப்ளேபாய் கேரக்டரில் தான் கலக்கியிருக்கிறார். கதைக்கு செல்லுவோம். ஆர்யாவின் அப்பாவான ஆடுகளம் நரேன் ரஜினி ரசிகர். அதுவும் வெறித்தனமான ரசிகர். தனது மனைவியுடன் தர்மத்தின் தலைவன் படம் பார்க்க செல்லுகிறார். அப்போது தியேட்டரில் வைத்து ஆர்யா பிறந்து விடுகிறார். அப்படி படம் பார்க்கம் போது பிறந்த காரணத்தில் என்னவோ ஆர்யாவுக்கு மறதி அதிகமாக இருக்கிறது. ஆர்யாவின் அப்பா அவருக்கு ரஜினிகாந்த என்று பெயர் வைக்கிறார்.

ஆர்யா வேலை செய்து கொண்டிருக்கும் போது யாராவது கூப்பிட்டு விட்டால் அந்த வேலையை அப்படியே விட்டு விட்டு வந்து விடுவார். ஒரு சமயத்தில் பிச்சைக்காரனுக்கு பைக் சாவியை கொடுக்கும் வகையில் சென்று விடுகிறது அவரது மறதி. இதனால் அவரை கஜினிகாந்த என்று அழைக்கிறார்கள்.

இந்நிலையில் ஆர்யாவுக்கு அவரது அப்பா ஆடுகளம் நரேன் திருமணம் செய்ய நினைக்கிறார். பெண் தேடி செல்லும் போது ஆர்யாவின் மறதியால் யாரும் அவருக்கு பெண் தர மாட்டேன் என்று சொல்லி திருப்பி அனுப்பி விடுகிறார்கள். அப்போது சாயிஷாவை திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கின்றனர். அப்போது ஆர்யா சாயிஷாவின் அப்பாவை சந்திக்க வேண்டும் என்பதை மறந்து விடுகிறார்.

இதனால் சாயிஷாவின் அப்பா ஆாயாவுக்காக வெகுநேரம் காத்திருந்து விட்டு அவர் வராத காரணத்தால் கோபத்தில் சென்று விடுகிறார். அவரை திரும்ப பார்த்து சமதானப்படுத்தும் நோக்கில் செல்லும் ஆர்யா தனக்கு இருக்கும் மறதி பற்றி அவரிடம் சொல்லுகிறார். இதை கேட்டவுடன் சாயிஷா அப்பா சம்பத் ஆர்யாவுக்கு பெண் தரமுடியாது என்று மறுத்து விடுகிறார்.

இதன்பின் சாயிஷாவை சந்திக்கும் ஆர்யா அவரை காதலிக்க தொடங்குகிறார். சாயிஷாவும் ஆர்யாவை காதலிக்க ஆரம்பிக்கிறார். சாயிஷாவிடமிருந்து தனது மறதியை மறைக்க பாடாத பாடு படுகிறார்.

இறுதியியல் மறதியால் பிரச்சனைகளை சம்பாதிக்கிறார்? தனது காதலி சாயிஷாவை திருமணம் செய்தாரா? மறதியிலிருந்து மீண்டு வந்தாரா என்பது தான் க்ளைமேக்ஸ் காட்சி.

படத்தில் ஆர்யா சதீஷ் நரேன் கூட்டணியில் வரும் காட்சிகள் திரையரங்கில் சிரிப்பு மழை தான் பெய்கிறது. சாயிஷா நடனத்திலும் மிரள வைக்கிறார். கருணாகரன் சதீஸ் இருவரும் இணைந்து காமெடிக்கு நல்ல முக்கியத்துவம் கொடுத்து இருக்கின்றனர். ஆள் மாறாட்டம் செய்யும் காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளது.

Leave a Response