இயக்குனராக, தயாரிப்பாளராக வெற்றி பெற்ற லிங்குசாமி தற்போது புது அவதாரம் எடுத்திருக்கிறார். கவிதை எழுத்தாளர் என்ற அவதாரம் தான் அது. லிங்குசாமி எழுதிய கவிதை புத்தகம் வெளியீடு சென்னை ஆழ்வார்பேட்டை ஆர்ட் ஹவுஸ்-ல் நடைபெற்றது.
விழாவில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இயக்குனர்கள் அமீர், விஜய், ஹரிஹரன், புகைப்பட கலைஞர் கணேஷ் வெங்கட்ராம், ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டு ஓவியங்களை பார்த்து ரசித்தனர்.
“லிங்கூ” என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த புத்தகம் லிங்குசாமி எழுதிய கவிதை மற்றும் ஓவியங்களின் தொகுப்பு ஆகும். ஏற்கனவே வெற்றிமாறன், கரு.பழனியப்பன் போன்றோ புத்தகங்கள் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.