சர்கார் பட சர்ச்சை – விஜய்க்கு டி.ராஜேந்தர் ஆதரவு..!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் முதல் பார்வையில் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றதால் பெரிய சர்ச்சை உருவாகிவிட்டது.

படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அப்புகைப்படத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்ட போதும் சர்ச்சை ஓயவில்லை. நீதிமன்றத்தில் விஜய் உள்ளிட்ட படக்குழுவிடம் அபராதம் வசூலிக்கக் கோரி வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று தன்னுடைய புதிய படம் பற்றி அறிவிப்பதற்காக செய்தியாளர்களைச் சந்தித்த டி.ராஜேந்தர், சர்கார் சிக்கலில் விஜய்க்கு ஆதரவாகப் பேசினார்.

புகைபிடிக்கும் காட்சிகள் எல்லாப் படங்களிலும் வருகின்றன. ஆனால் விஜய் மட்டும் குறி வைத்துத் தாக்கப்படுவது ஏன்? அவர் தமிழர் என்பதாலா? கஞ்சாவுக்கு தடை விதித்திருப்பதைப் போல புகையிலைக்கும் தடை விதிக்கலாம், சிகரெட் தயாரிப்புக்கு தடை விதிக்கலாம், சிகரெட்டே தயாரிக்கவில்லையென்றால் சினிமாவில் மட்டும் எப்படி வரும்?

சமுதாயத்தின் பிரதிபலிப்புதான் படங்கள். நாட்டில் சிகரெட் இருந்தால்,திரைப்படங்களில் பலவித வேடங்களை உருவாக்கும்போது , சிகரெட் பிடிக்கிற கேரக்டர் வரத்தான் செய்யும் என்றார் டி.ராஜேந்தர்.

Leave a Response