ஆரணி – சென்னை இடையே புதிய பேருந்துகள் இயக்கம் ; கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சர்..!

ஆரணி – சென்னை மற்றும் ஆரணி – திருப்பூர் இடையே புதிய பேருந்துகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பச்சை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருவண்ணாமலை மண்டலம் சார்பாக ஆரணி – சென்னை, ஆரணி – திருப்பூர் இடையே புதிய பேருந்துகள் தொடக்க விழா நேற்று ஆரணி பழைய பேருந்து நிலைய வளாகத்தில் நடைப்பெற்றது.

இதற்கு ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். செஞ்சி வி.ஏழுமலை எம்.பி., தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., போக்குவரத்து கழக துணை மேலாளர்கள் கே.செல்வகுமார் (வணிகம்), எஸ்.நடேசன் (தொழில்துறை), மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன், உதவி ஆட்சியர் எஸ்.பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆரணி போக்குவரத்து பணிமனை மேலாளர் வெங்கடேசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தமிழக இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்றார்.

அவர், சென்னைக்கு இரண்டு புதிய பேருந்துகளையும், திருப்பூருக்கு ஒரு பேருந்தையும் பச்சை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர், பொதுமக்களுக்கு இனிப்பும் வழங்கினார். இதனையடுத்து புதிய பேருந்தில் அமைச்சர், ஆட்சியர், எம்.பி., எம்.எல்.ஏ., கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் சிறிது தூரம் பயணம் செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர்கள் வழக்குரைஞர் கே.சங்கர், சாந்திசேகர், கோவிந்தராசன், ஜெயலலிதா பேரவை நிர்வாகிபாரி பி.பாபு, இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் ஜி.வி.கஜேந்திரன்,

பாசறைநிர்வாகி பி.ஜி.பாபு, மாவட்ட துணை செயலாளர் டி.கருணாகரன், நகர செயலாளர் அசோக்குமார், ஒன்றிய செயலாளர்கள் பி.ஆர்.ஜி.சேகர், எம்.வேலு உள்பட கட்சி பொறுப்பாளர்கள் பலர் பங்கேற்றனர்.

Leave a Response