உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆர் பெயரில் கலை மற்றும் சமூக ஆய்வியல் இருக்கை : முதல்வர் அறிவிப்பு..!

தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை இன்று வெளியிட்டார். அதில், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் அமைப்புகள் மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் இன்று சுற்றுச்சூழல், வணிக வரிகள், முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவு துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது.

அதனையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் அமைப்புகள் மாநாடு நடைபெறும். தமிழ் மொழி சொற்களைத் தொகுக்கும் சொற்குவை திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

மேலும், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன முதுகலை மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அதிகரிப்படும் என்றும், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆர் பெயரில் கலை மற்றும் சமூக ஆய்வியல் இருக்கை ரூபாய் 1 கோடியில் ஏற்படுத்தப்படும்.

விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க மானியமாக ரூபாய் 10 லட்சம் வழங்கப்படும். இறகுப் பந்து அகாடெமி ரூபாய் 10 கோடி செலவில் அமைக்கப்படும். வேலூரில் மாவட்ட விளையாட்டு வளாகம் ரூபாய் 17.30 கோடியில் கட்டப்படும். திருச்செந்தூர் முருகன் கோவிலில் 30 கோடியில் பக்தர்கள் தங்க விடுதிகள் கட்டப்படும் என்று அறிவித்தார்.

Leave a Response