சேலம் எட்டுவழிச் சாலை திட்டம்:முதல்வர் பழனிசாமி அவருடைய நிலத்தை தர முன் வருவாரா?அன்புமணி ராமதாஸ் கேள்வி..!

சேலம் எட்டுவழிச் சாலை திட்டம் குறித்து முதல்வர் தவறான தகவலை அளிப்பதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சேலம் அயோத்தியாபட்டினத்தில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பேசிய அன்புமணி,
சேலம் எட்டுவழிச் சாலைக்கு எதிராகவே மக்கள் உள்ளனர். தவறான தகவலை முதல்வர் அளிக்கிறார். எட்டு வழிச்சாலைக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை.

விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முதல்வர் பழனிசாமி அவருடைய நிலத்தை தர முன் வருவாரா?. 8 வழிச்சாலை திட்டம் குறித்து 5 மாவட்ட மக்களிடம் முதல்வர் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். 5 லட்சம் மரங்களை வெட்டிய பிறகு பசுமை வழிச்சாலையா? எனக் கேள்வி எழுப்பினார்.

Leave a Response