அன்புமணியை போல் அப்பாவின் நிழலில் அரசியலுக்கு வரவில்லை-தமிழிசை ஆவேச பேட்டி..!

எனது சுய உழைப்பினால்தான் அரசியல் கட்சிக்கு தலைவராக வந்துள்ளேன் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அன்புமணிக்கு பதிலடி கொடுத்துள்ளார். பேட்டியளித்துள்ளார். தேசியப்பண்பு இருப்பதால் தான் என்னால் தேசியக்கட்சியின் தலைவராக இருக்க முடிகிறது. என்ன தகுதி எனக்கேட்ட அன்புமணிக்கு தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.யார் அறிவாளி, உழைப்பாளி என அன்புமணியுடன் விவாதிக்க தயார் என தமிழிசை சவால் விடுத்துள்ளார்.

வாரிசுகள் பாமவுக்கு வரமாட்டார்கள் என்ற ராமதாசின் வாக்குறுதி என்ன ஆனது என தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.நான் யாரையுமே மரியாதைக்குறைவாக பேசியதில்லை.அன்புமணி ராமதாஸ் தாம் தான் உலகிலேயே புத்திசாலி போல் பதிவுகளை இட்டு வருகிறார். ஒருவருடைய மகன் என்பதால் மட்டுமே அன்புமணி அமைச்சரானார் என்பதை அவர் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

கருத்திற்கு கருத்து தான் பதிலாகும். அரசியலில் ஆண் ,பெண் வேறுபாடு இல்லை. உயிரை துச்சமென நினைத்து தான் அரசியலில் ஈடுபட்டுள்ளேன் என ஆவேசமாக பேசியுள்ளார். நான் உயிருக்கு பயந்தவள் இல்லை. ஆனால்

செங்கல்பட்டு பொதுக்கூட்டத்திற்கு வந்தவர்களின் உயிருக்காகத்தான் நான் பயந்தேன் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டியளித்துள்ளார்.

Leave a Response