காவிரி ஆணையத்தை கர்நாடகா முடக்க பார்க்கிறது-பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம்..!

காவிரி ஆணையத்தை கர்நாடககா முடக்க பார்க்கிறது என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனையில் மேலாண்மை வாரியம் அமைக்க வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பின் பல முறை இழுத்தடித்து கடைசியாக திட்ட அறிக்கையை தாக்கல் செய்தது.

பருவமழை தொடங்குவதற்குள் மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

காவிரி ஆணைய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் கர்நாடக இன்னும் தனது மாநில உறுப்பினர்களை அறிவிக்கவில்லை. இதனால் வாரிய கூட்டம் தொடங்காமல் உள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.

அதில், 6 ஆண்டுகளாக உரிய நேரத்தில் கர்நாடகா தமிழகத்திற்கு நீரை திறந்துவிடவில்லை. எல்லா வருடமும் கர்நாடக தமிழகத்தை வஞ்சிக்கிறது. காவிரி பங்கீடு தொடர்பான கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்.

காவிரி ஆணையத்தை கர்நாடக முடக்க பார்க்கிறது. மத்திய அரசும், பிரதமரும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழகத்திற்கு சரியான நீதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.

Leave a Response