உங்கள் இமேஜை டேமேஜ் செய்யும் உறவினர்களிடம் கவனமாக இருங்கள் ரஜினி சார்…

சூப்பர் ஸ்டார் என்று பலரால் போற்றப்படும் நடிகர் ரஜினி, அரசியலுக்கு வருகிறார் என்றால் பலர் அவரை எதிர்ப்பதும், விமர்சிப்பதும் உண்டு. இந்த எதிர்ப்பும், விமர்சனங்களும் ரஜினி மீது ரஜினி மீது ஒருபுறம் இருக்க, ரஜினியின் நற்பெயரை டேமேஜ் செய்வது அவருடைய உறவினர்கள்.

உறவினர்கள் தான் ரஜினியின் நற்பெயரை டேமேஜ் செய்கின்றனர் என்பதற்கு ஒரு சிறிய உதாரணம்……வட அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் நகரில் மே 6, 2018 அன்று அங்கு நடத்தப்பட்ட வட அமெரிக்காவின் ‘ரஜினி மக்கள் மன்றம்’ திறப்புவிழா. வெளிநாடுகளில் வசிக்கும் பெரும்பாலானோர் வருமானம் ஈட்டுவதற்காகவே தான் தங்களுடைய தாய்நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். இப்படித்தான் வட அமெரிக்காவில் உள்ள தமிழர்களும் தங்களுடைய தாய்நாட்டை விட்டுவிட்டு பொழுப்புக்காக அங்கு வசிக்கின்றனர்.

சரி விஷயத்துக்கு வருவோம்…!

ரஜினி மக்கள் மன்றம் வாஷிங்டன் நகரில் திறப்பு விழா நடத்தப்பட்டது. விழாவுக்கு ரஜினி ரசிகர்களை அழைக்கலாம், அவர்களும் ரஜினி மீது வைத்துள்ள அளவில்லா நம்பிக்கையும், மதிப்பினாலும் அந்த விழாவில் கலந்துகொண்டு உறுப்பினராவார்கள். ஆனால் அங்கு நடந்தது என்னவென்றால், இந்த ரஜினி மக்கள் மன்றம் திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தது ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் அவர்களின் சகோதரி மகள் மதுவந்தி அருண். இந்த அழைப்பு விடுத்தது, உண்மையில் ரஜினி மீதும் ரஜினி மக்கள் மன்றம் மீதும் மதுவந்திக்கு அவ்வளவு ஈர்ப்பு என்று நாம் நம்பினால் அது முட்டாள்தனம். இப்படி தான் வட அமெரிக்காவில் உள்ள ரஜினி ரசிகர்கள் புலம்புகிறார்கள்.

மேட்டர் என்னவென்றால், இந்த திறப்பு விழாவில் கலந்துகொள்ள வேண்டுமென்றால் அன்று அதே இடத்தில், அதே நேரத்தில் மதுவந்தி நடத்தும் நாடகத்தின் நுழைவு சீட்டை வாங்கவேண்டும். அப்படி அந்த நாடகத்தை பார்க்க வருபவர்கள் தான் அங்கு நடக்கும் ரஜினி மக்கள் மன்றம் திறப்பு விழாவில் கலந்துகொள்ள இயலும் என்ற நிலை அப்போது உருவாகியது.

அங்கு இருந்த ரஜினி ரசிகர்கள் சிலர் கலந்துகொள்ளவில்லை, கலந்துகொண்ட சிலரும், ரஜினிக்காக அந்த நாடகத்தை பணம் கொடுத்து டிக்கட் வாங்கி தியாகம் செய்வதாகவே புலம்பியுள்ளனர்.

இப்போதே ரஜினியின் உறவினர்கள், ரஜினியின் அரசியலை வைத்து வருமானம் ஈட்ட நினைப்பவர்கள்…நாளை ரஜினி தமிழகத்தை ஆள வந்தால், இன்றைய தமிழகத்தை விட மிகவும் மோசமாகிவிடும்.

தனிப்பட்ட ரஜினி, நேர்மையானவராக இருப்பர் என்பது உண்மையாக இருக்கலாம். அப்படியென்றால் ரஜினி தங்களுடைய அரசியல் பயணத்தில் சுயலாபம் காண நினைக்கும் உறவினர்களை அறவே தள்ளி வைக்கவேண்டும். தமிழ்ஷகத்தில் சுயநலமற்ற, ஊழல் இல்லாத ஒரு ஆட்சியை ரஜினி நடத்த விரும்பினால், மதுவந்தி அருண் போன்ற உறவினர்களை கண்டிப்பாக அவருடைய அரசியலில் இருந்து கட்டாயம் தள்ளிவைக்க வேண்டும். முயற்சி செய்வாரா ரஜினி?

இந்த கட்டுரையை படிக்காமல் தலைப்பை மட்டுமே படிக்கும் ரஜினி ரசிகர்கள் கண்டிப்பாக இந்த கட்டுரையை எழுதயவரை ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்வார்கள் என்பது நாங்கள் அறிந்ததே.

உறவினர்களிடம் கவனமாக இருங்கள் ரஜினி சார்….

Leave a Response