படத்தின் வெற்றியை வைத்து அரசியலிலும் வெற்றி பெறுவார் என்று கூற முடியாது:ரஜினிகாந்தை வம்புக்கு இழுக்கும் அமைச்சர் ஜெயகுமார்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் அபாரமாக இருந்ததை வைத்து இந்த படம் வெற்றிப்படம் என்று கருதப்படுகிறது.

முதல் நாளில் இந்த படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 15 கோடியும் சென்னையில் மட்டும் சுமார் 1.75 கோடியும் அமெரிக்காவில் மட்டும் ஒரு மில்லியன் டாலரும், உலகம் முழுவதும் சுமார் 50 கோடியும் வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தை அனைத்து ஊடகங்களும் பாராட்டி விமர்சனம் செய்துள்ளது மட்டுமின்றி ரஜினியை சமீபத்தில் அதிகளவு ட்ரோல் செய்த சமூக வலைத்தள பயனாளிகளும் இந்த படம் வெற்றிப்படம் என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் ஜெயகுமாரிடம் காலா’ பட வெற்றி குறித்தும் இந்த வெற்றி ரஜினிக்கு அரசியலிலும் கிடைக்குமா? என்பது குறித்தும் கெள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் கூறிய அமைச்சர் ஜெயகுமார், ‘ஒரு நடிகர் நடித்த படத்தின் வெற்றியை வைத்து அவர் அரசியலிலும் வெற்றி பெறுவார் என்று கூற முடியாது. அரசியலில் வெற்றி பெற மக்களின் செல்வாக்கு வேண்டும்’; என்று கூறினார்

Leave a Response