பிரதமர் மோடிக்கு 9 பைசா காசோலை அனுப்பிய தெலுங்கானா இளைஞர்..!

பெட்ரோல் விலை கூடும்போது ரூபாய்க்கணக்கில் கூடி வருவதாகவும், ஆனால் குறையும்போது பைசாக்கணக்கில் குறைந்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இளைஞர் ஒருவர் பிரதமர் மோடிக்கு 9 பைசாவுக்கான காசோலையை அனுப்பியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று பெட்ரோல் விலை 9 பைசா மட்டுமே குறைக்கப்பட்டது. ஆனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை அதிகமாக குறைந்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 பைசா குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ராஜாண்ணா சிர்சிலாவை சேர்ந்த இளைஞர் சாந்து, என்பவர் பிரதமர் மோடிக்கு 9 பைசா ‘செக்’ அனுப்பியுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியரிடம் காசோலையை ஒப்படைத்துள்ளார். இந்த காசோலை பிரதமருக்கு செல்லுமா? என்பது தெரியவில்லை

Leave a Response