அமீரின் உதவி இயக்குனர் இயக்கியிருக்கும் பஞ்சுமிட்டாய்..!

இயக்குனர் அமீரின் உதவி இயக்குனர் எஸ்.பி. மோகன் தற்போது பஞ்சுமிட்டாய் திரைப்படத்தின் மூலம் இயக்குனராகியுள்ளார்.
ம.கா.பா ஆனந்த், நிகிலா விமல், சென்ராயன், பாண்டியராஜன், தவசி, கலைராணி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். எஸ்.கணேஷ், எம்.எஸ்.வினோத்குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.
எஸ்.பி.மோகன் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு நான்கு தேர்ந்த எழுத்தாளர்கள் திரைக்கதையும், இரண்டு வசனகர்த்தாக்கள் வசனங்களையும் எழுதியுள்ளனர்.
திருமணமான ஒரு ஜோடியின் முதல் வாரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் தமிழில் வெளிவரவிருக்கும் முதல் மாய எதார்த்த திரைப்படம் என்றும் இப்படம் அனைவராலும் விரும்பத்தகும் அளவுக்கு ஜனரஞ்சகமாக எடுக்கப்பட்டுள்ளதாக இப்படத்தின் இயக்குனர் எஸ்.பி.மோகன் தெரிவித்துள்ளார்,
நிறம் என்பது கண்களுக்கு புலப்படும் புறக்காரணி. நம் கண்களில் உள்ள கருவிழி தனக்கே உரிய நிற உணர்விகளால், எது எந்த நிறம் என்பதை உணர்ந்து அதனை மூளைக்கு அனுப்புகிறது. ஆனாலும் பலருக்கும் நிறக்குறைபாடுகள் உள்ளன. உதாரணமாக பேஸ்புக் அதிபர் மார்க் என்பவருக்கு , நீல நிறத்தை மட்டுமே நன்றாக நிற உனர்விகளால் உணர முடியும். அதுவே அவரது கண்களை எரிச்சலூட்டாத நிறமாம். எனவேதான் பேஸ்புக் நீலநிற த்தில் உள்ளதாம். சிலருக்கு சிவப்பைப் பார்த்தால், பச்சையாகவும், சிலருக்கு பச்சையைப் பார்த்தால் சிவப்பாகத் தெரியும்.
ஆனால் உண்மையில் இந்தத் தவறுகள் காணும் காட்சிப்பொருளிலோ, அல்லது காண்பவரின் கண்களிலோ நிகழுவதில்லை. அப்படித் தெரிவதற்கான மனோவியல் காரணமும் இருக்கிறது என்று கூறுகின்றனர்.
இந்த விஷயத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் விரைவில் வெளியாகவிருக்கும் ’பஞ்சுமிட்டாய்’.

Leave a Response