உங்களை நம்பும் முட்டாள்கள் என்றா மக்களை நினைக்கிறீர்கள்? ரஜினியை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்..!

தூத்துக்குடி மாவட்டமே கடந்த வாரம் நிகழ்ந்த துப்பக்கி சூட்டு சம்பவத்தில் இருந்து, இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. அதிலும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு ஆணை பிறப்பித்திருப்பது, அவர்களின் வலிகளுக்கெல்லாம் மருந்தாக அமைந்திருக்கிறது.

இந்த சூழலில் இன்று ரஜினிகாந்த் தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சென்று சந்திக்க இருக்கிறார். இது குறித்து அவர் பேசும் போது ”என்னை பார்த்தால் மக்கள் நிச்சயம் மகிழ்ச்சியடைவார்கள்” என தெரிவித்திருக்கிறார்.

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடந்து 13 உயிர்களை இழந்து, அந்த மாநிலமே தவித்துக்கொண்டிருந்த தருணத்தில், ரஜினி அங்கு செல்லவில்லை. துணைமுதல்வர் போல 144 தடை உத்தரவு நீங்கிய பிறகு சென்றும் மக்களை சந்திக்கவில்லை. இன்று தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு, பிரச்சனை கிட்டத்தட்ட முடிந்திருக்கும் போது அவர் அங்கு செல்லவிருக்கிறார்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் இன்னும் பலர் 144 தடை உத்தரவையும் மீறி சென்று, மக்களை சந்தித்தனர்.

ஆனால் ரஜினி இத்தனை நாளும் காலா திரைப்படத்துக்கான பிரமோஷன் வேலைகளில் ஈடுபட்டுவிட்டு, இத்தனை தாமதமாக தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ”என்னை பார்த்தால் மக்கள் நிச்சயம்மகிழ்ச்சியடைவார்கள்” என்று கருத்தும் வேறு கூறியிருக்கிறார்.

அவரின் இந்த கருத்து இப்போது மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இன்னும் உங்கள் போன்றவர்களை நம்பும் முட்டாள்கள் என்றா மக்களை நினைக்கிறீர்கள்? என இணையத்தில் ரஜினியை திட்டி தீர்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Leave a Response