முதலமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்: மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடி பொதுமக்கள் 13 பேரின் உயிரிப்புக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டை கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சட்டமன்ற அலுவல் ஆய்வுக்கூட்டத்தை புறக்கணித்தன.

இதன் பின்னர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரையும், எஸ்பி-யையும் பணியிட மாற்றம் செய்துள்ளது அரசின் கண்துடைப்பு நடவடிக்கை என்றார்.

துப்பாக்கி சூட்டை கண்டித்து வெளிநடப்பி செய்துள்ளோம். 3 நாட்களாக தூத்துக்குடி மாவட்டம் கொந்தளிப்பாக உள்ளது. பலர் உயிரிழந்துள்ளனர். சாதாரண உடையில், பயிற்சி பெற்றவர்கள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

பதவியைக் காப்பாற்றிக் கொள்வதிலேயே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி யோசனை செய்து கொண்டிருக்கிறார். செயலற்ற தலைமையில் உள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்றார். தூத்துக்குடி பொதுமக்கள் 13 பேர் உயிரிழப்புக்கு முதலமைச்சர் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

Leave a Response