ஏழு உயிர் பலிக்கு பின் வந்தது அமைதி அறிக்கை ?அரசின் மீது பலர் குற்றச்சாட்டு..!

ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எதிராக மக்கள் 100 நாட்களாக அமைதியான முறையில் போராடிவந்தனர். அப்போதெல்லாம் அதை கண்டும் காணாமல் இருந்த அரசாங்கம். இன்று மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட போது மக்களை ஒடுக்குவதற்காக இன்று துப்பாக்கி சூட்டில் காவல்துறை இறங்கியது இதில் 7 பேர் பலியாகிவுள்ளனர். 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ள நிலையில் 65 பொதுமக்கள் தடியடியில் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து அரசு செய்திஅறிக்கைஒன்றை வெளியிட்டுள்ளது

அரசு சட்டபூர்வ நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதுவரை தூத்துக்குடி மக்கள் அமைதி காக்க வேண்டும் என அறிக்கை விடுத்துள்ளார் மேலும் ஸ்டெர்லைட்டைபுதுப்பிக்க இசைவாணையில் அரசு கையெழுத்திடவில்லை எனவும் தெரிவித்துள்ளர். 20ஆயிரம் பேர் வன்முறையில் ஈடுபட்டனர் அதனால் காவல்துறை துப்பாக்கிச் சூடு துரதிஷ்ட வசமானது எனக் கூறியுள்ளார்.மக்களின் உணர்வுகளுக்கு அரசு எப்போதும் மதிப்பளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைதி அறிக்கையை துப்பாக்கிச் சூட்டிற்கு அனுமதி கொடுக்கும் முன் அறிக்கைவிடக்கூடாதா எனப்பலரும் அரசின் மீது குற்றம்சாட்டி வருகின்றனர்.

Leave a Response