கர்நாடகத்தில் எந்த ஆட்சி வந்தாலும், தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் கிடைக்காது-வைகோ பளிச்..!

கர்நாடகத்தில் எந்த ஆட்சி வந்தாலும், தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் கிடைக்காது என்று அதிர்ச்சி குண்டை தூக்கி போட்டுள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: மத்திய அரசு, தமிழகத்தின் உரிமைக்கான குரல்வளையை அறுத்துவிட்டது. தமிழக மக்களுக்கு முழுமையாக தெரியவில்லை. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்புதான் நமக்கு மிகவும் பாதுகாப்பாக இருந்தது.

ஆனால் அதில் உள்ள முக்கியமான அம்சங்கள் தற்போது நீக்கப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு முதல்வர் வெற்றி, வரவேற்பு என அறிக்கை விடுகிறார். காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் ஒரு வரியையாவது முதல்வர் படித்திருக்கிறாரா.? அங்கு அணைகள் கட்டுவதை தடுக்கும் உரிமை, பாதுகாப்பு தமிழகத்திற்கு இருந்தது.

இரு மாநிலங்களும் இணைந்து ஒரு முடிவுக்கு வரலாமே தவிர தனியாக மேற்கொள்ள இயலாது. முன்பு அணைகளில் மத்திய தொழில் பாதுகாப்பு படை மட்டும்தான் இருக்கும் என்று இருந்தது. தற்போது அந்தந்த மாநிலங்களுக்கு மாநில அணைகள் கட்டுப்பட்டவை என கூறப்படுவதால் உள்ளூர் போலீசார் இருப்பார்கள்.

எனவே தண்ணீர் திறக்க வாய்ப்பேயில்லை. தற்போதுள்ள சுப்ரீம் கோர்ட் நீதிபதி தீபக்மிஸ்ரா இருக்கும்வரை, தமிழகத்திற்கு நீதி கிடைக்காது. திட்டமிட்டு தமிழகத்திற்கு வஞ்சகம் செய்துள்ளார்.

எனவே இவரது ஓய்வுக்கு பிறகு, இந்திய அரசியலமைப்பு சட்ட பெஞ்ச்க்கு கோரிக்கையை கொண்டுசெல்வதன் மூலமே அங்குள்ள அதிக எண்ணிக்கையுள்ள நீதிபதிகள் மூலமே தமிழகத்திற்கு நல்ல தீர்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Response