ஆக்‌ஷன் ஹீரோனு சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன் : விஷால்

சமீபத்தில் வெளிவந்த உரு படத்தின் தயாரிப்பாளர் V.P.விஜி, இயக்குநராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘எழுமின்’.
தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றியே ‘எழுமின்’ படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார். விவேக், தேவயானி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
விழாவில் நடிகர்கள் விஷால், கார்த்தி, சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டார்கள்.
விஷால் பேசும்போது, ‘நான் ஆக்‌ஷன் ஹீரோ என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுறேன். இந்தப் படத்தில் பசங்க கலக்கி இருக்கிறார்கள். குழந்தைகள் எல்லோரும் தற்காப்பு கலைகள் கற்றுக் கொள்ள வேண்டும். முக்கியமா குட் டச், பேட் டச் எது என்று சொல்லி தர வேண்டும். இந்த படத்துக்கு கொடி அசைக்க நான் வரக்கூடாது. ஜாக்கிசான் தான் வர வேண்டும். இந்த பசங்க என்ன இன்ஸ்பையர் பண்ணிருக்காங்க.
மியூசிக் நல்லா வந்திருக்கு. விவேக் எழுதியிருக்க பாட்டு ரொம்ப நல்லாருக்கு. விவேக் உண்மையை தைரியமா பேசுவாரு. எலக்சன்ல நின்னா கண்டிப்பா MLA ஆயிடுவாரு. இந்த படத்துக்கு எல்லாரும் சப்போர்ட் பண்ணுங்க. பசங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகள் கத்துக் கொடுங்க’ என்றார்.

Leave a Response