மீண்டும் அரசியலில் குதித்தார் நாஞ்சில் சம்பத்..!

ஆர்ஜே பாலாஜி புதிதாக ‘எல்கேஜி’ எனும் அரசியல் படத்தில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இந்த படத்திற்காகத்தான் கடந்த சில நாட்களாக சுவர் விளம்பரம் மற்றும் கட்சி கொடி ஆகியவை வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்ஜே பாலாஜி ஐசரி கணேஷ் தயாரிக்கும் அரசியல் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். அந்தப் படத்தின் டைட்டில் ‘LKG’. இந்தப் படத்தின் நாயகி குறித்த அறிவிப்பை ஆர்ஜே பாலாஜி வெளியிட்டார். நடிகை ப்ரியா ஆனந்த் இப்படத்தின் ஹீரோயினாக நடிக்கிறார்.

வெளியான படத்தின் புகைப்படத்தில் ஆர்ஜே பாலாஜி அணிந்திருக்கும் மோதிரத்தில் நாஞ்சில் சம்பத் படம் உள்ளது. இதனையடுத்து, படத்தில் நாஞ்சில் சம்பத் நடிப்பதை உறுதி செய்துள்ளார் ஆர்ஜே பாலாஜி.

அரசியலில் இருந்து சிறிது காலம் ஒதுங்கியிருந்த நாஞ்சில் சம்பத் ஆர்ஜே பாலாஜியுடன் இணைந்து ஒரு புதிய பயணத்தைத் தொடங்கவுள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். நாஞ்சில் சம்பத் ‘எல்கேஜி’ படத்தில் ஆர்ஜே பாலாஜிக்கு அப்பாவாக நடித்திருப்பதாக ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார்.

மதிமுக-வில் முக்கியப் பொறுப்பில் இருந்துவந்த பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பிறகு அ.தி.மு.க-வில் இணைந்தார். அதன்பிறகு, அவர் பேசிய பல விஷயங்களை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளினர். அவர் கூறிய பல கருத்துகள் பலரும் விமர்சிக்கும்படி இருந்ததால் அரசியல் வாழ்க்கையில் சறுக்கலைச் சந்தித்தார். இதையடுத்து, தீவிர அரசியலை விட்டு ஒதுங்கிக் கொள்வதாக சமீபத்தில் அறிவித்தார்.

இந்நிலையில், ஆர்ஜே பாலாஜிக்காக மீண்டும் அரசியல்வாதியாகியிருக்கிறார் நாஞ்சில் சம்பத். அரசியல் படமான ‘எல்கேஜி’ படத்தில் அரசியல்வாதி வேடத்தில் நாஞ்சில் சம்பத் நடிக்கவிருக்கிறார்.

Leave a Response