வந்தவாசி கோவிலில் நாட்டு வெடி குண்டு கண்டெடுப்பு !

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள பழமைவாய்ந்த ஸ்ரீ ரங்கநாதர் ஆலயம் இருக்கிறது. அந்த ஆலையத்தில் இன்று காலை ஆலயத்தை தூய்மை படுத்தும் பணியில் பக்தர் ஒருவர் ஈடுபட்டிருந்தார் அப்போது கோவில் மதில் சுவர் ஓரமாக பந்து வடிவில் சனலும், திரியும் சுற்றப்பட்ட மர்ம பொருட்கள் கிடப்பதை கண்டு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து அங்கு வந்த போலீஸார் அந்த பொருளை ஆய்வு செய்த போது அது வெடிக்காமல் இருந்த நாட்டு வெடுகுண்டுகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து பாதுகாப்பாக அந்த வெடிகுண்டுகளை எடுத்து சென்றனர். மேலும் கோவில் வளாகத்தில் வெடிகுண்டுகளை பதுக்கியது யார் என்றும், நாச வேலைகளுக்காக பதுக்கப்பட்டதா என்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Response