மீண்டும் அம்மா சென்டிமென்ட்டில்”விஜய் ஆண்டனி”..!

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘காளி’. இப்படம் இன்று தமிழ், தெலுங்கில் வெளியாகி இருக்கிறது.

விஜய் ஆண்டனி நடித்து வசூல் சாதனை புரிந்த ‘பிச்சைக்காரன்’ படம் அம்மா சென்டிமென்ட்டுடன் வெளிவந்தது. அதற்குப் பிறகு மீண்டும் அம்மா சென்டிமென்ட் உள்ள கதையில் விஜய் நடித்திருக்கும் படம் தான் ‘காளி’.

அமெரிக்காவில் தத்தெடுத்து வளர்க்கப்பட்டு டாக்டராக இருக்கும் விஜய் ஆண்டனிக்கு அடிக்கடி ஒரு கனவு வருகிறது. அந்தக் கனவு ஏன் வருகிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக இந்தியாவிற்கு வருகிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

தன் அம்மா யார் என்பதை அவர் கண்டுபிடித்தாரா ?, அந்தக் கனவு எதனால் வருகிறது ?, என்பதுதான் படத்தில் அம்மா சென்டிமென்ட், நகைச்சுவை, காதல், பாசம் என பல விஷயங்களை உள்ளடக்கிய படமாக ‘காளி’ உருவாகியிருக்கிறது.

‘பிச்சைக்காரன்’ படம் போலவே இந்தப் படமும் பெரிய வரவேற்பைப் பெறும் என படக்குழுவினர் நம்பிக்கையில் இருக்கிறார்கள்.

Leave a Response