122-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி !

நீலகிரி மாவட்டம் உதகையில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடைபெறுகிறது.

இந்த ஆண்டு நடைபெறும் மலர் கண்காட்சி  122 வது மலர் கண்காட்சி. இந்த மலர் கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மேலும் அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் இந்த விழாவில் பங்கேற்றனர். அவருடன் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, செல்லூர் ராஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஒவ்வொரு ஆண்டும்  மலர் கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளதால் 5 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல வகையான பூக்களை  கொண்டு அலங்கார வளைவுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒருலட்சத்துக்கும் அதிகமானோர் இந்த மலர் கண்காட்சியை பார்வையிடுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த கண்காட்சியில் 185 வகையான மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பல வகையான பூக்களை கொண்டு மேட்டூர் அணை மாதிரி செய்யப்பட்டுள்ளது.

மேலும் பூக்களை கொண்டு பெண் உருவம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. மிக்கி மவுஸ் உள்பட பல உருவங்கள் பல்வேறு பூக்களை கொண்டு செய்யபப்ட்டுள்ளதால் சுற்றுப்பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர்.

Leave a Response