சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் பட பர்ஸ்ட் லுக்…

பாடலாசிரியரும், நடிகருமான  அருண்ராஜா காமராஜ் இயக்குனராக அவதாரம் எடுத்து இயக்கி கொண்டிருக்கும் படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். இந்த பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் தலைப்புடன் பர்ஸ்ட் லுக் வௌியிடப்பட்டது.

படத்துக்கு “கனா” என தலைப்பிட்டுள்ளனர். மகளிர் கிரிக்கெட் விளையாட்டை பின்னணியாகக் கொண்டு இப்படம் உருவாகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ், கிரிக்கெட்டில் சாதிக்க துடிப்பவர்.  அவரது தந்தை சத்யராஜ், அவருக்கு எப்படி உறுதுணையாக இருக்கிறார் என்பதை எமோஷனலாக படம் சொல்கிறதாம்.

இப்படத்துக்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். இவர் சிவகார்த்திகேயன், அருண்ராஜாவுடன் படித்தவர். மூன்று நண்பர்களும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

Leave a Response